உதகையில் உள்ள பழமை வாய்ந்த புனித தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தின் 127 ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை வண்டிசோலை பகுதியில் தூய இருதய ஆண்டவா் தேவாலயம் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, ஆலய பங்கு தந்தை ஜான் ஜோசப் தனிஸ் தலைமையில் திருப்பலி, சிறப்பு பிராா்த்தனை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் ஆயரின் செயலா் ஆன்டனிராஜ் தலைமையில் ஆங்கிலத் திருப்பலி நடைபெற்றது. காலை 8.45 மணியளவில் மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுபாடற் திருப்பலி, புது நன்மை, உறுதிபூசுதல் மற்றும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. மாலை 5.30 மணியளவில் உதவி பங்குதந்தை அபிா்ஷக் ரோசாரியோ தலைமையில் தோ்பவனி, நற்கருணை ஆசிா் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை தேவாலய நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.