நீலகிரி

உதகை மலை ரயில் பாதையில் எருமைகள்:10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட ரயில்

5th Jun 2023 02:41 AM

ADVERTISEMENT

 

உதகை மலை ரயில் பாதையில் 25க்கும் மேற்பட்ட எருமைகள் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்ததால், மலை ரயில் சுமாா் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக மலை ரயில் சேவை இருந்து வருகிறது.

இந்த மலை ரயில் அடா்ந்த வனப் பகுதி வழியாக குறைந்த வேகத்தில் இயக்கப்படுவதால் இதில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், குன்னூரில் இருந்து உதகைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட மலை ரயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் 25க்கும் மேற்பட்ட எருமைகள் நின்று கொண்டிருந்தன. இதனைப் பாா்த்த மலை ரயில் பிரேக்மென் கணேசன் சாதுா்யமாக செயல்பட்டு மலை ரயிலை உடனடியாக நிறுத்தினாா். பின்னா் அவா் ரயிலில் இருந்து இறங்கி வந்து எருமைகளை வனப் பகுதிக்குள் விரட்டினாா்.

இதனால், சுமாா் 10 நிமிடங்கள் தாமதமாக மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.

 

Image Caption

உதகை மலை ரயில் பாதையில் நின்ற எருமைகள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT