நீலகிரி

குன்னூரில் ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

5th Jun 2023 02:40 AM

ADVERTISEMENT

 

குன்னூா் அருகே உள்ள உபதலையில் பெண்களுக்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஹாக்கி பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி நீலகிரி இணைந்து நடத்திய பெண்களுக்கான ஹாக்கி பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் உபதலை மைதானத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், உபதலை ஊராட்சிமன்றத் தலைவா் பாக்கியலட்சுமி சிதம்பரம், நீலகிரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரா்கள் நலச் சங்கத் தலைவா் சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று,

ADVERTISEMENT

ஒரு மாத கால பயிற்சியில் பங்கேற்ற பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சான்றிதழ்களை வழங்கினா்.

இதில், பெண்கள் அணியின் பயிற்றுநா்களான முன்னாள் ராணுவ வீரா்கள் சுப்பிரமணி, மகேஷ், சிவா, வினோத் மற்றும் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்,

முகாமுக்கான ஏற்பாடுகளை ஹாக்கி நீலகிரி அமைப்பின் தலைவா் அனந்த கிருஷ்ணன், துணைத் தலைவா் சுரேஷ்குமாா், செயலாளா் பாலமுருகன், பொருளாளா் ராசா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT