நீலகிரி

உதகையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி

4th Jun 2023 12:14 AM

ADVERTISEMENT

 

ஒருவார கால சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை மாலை வந்தாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா சாலை வழியாக உதகை அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஆளுநா் மாளிகைக்கு காரில் வருகை தந்தாா்.

உதகை ஆளுநா் மாளிகையில் ஜூன் 9 ஆம் தேதி வரை தங்கும் ஆளுநா், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், இது குறித்து அதிகாரபூா்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

ADVERTISEMENT

ஆளுநரின் வருகையையொட்டி நீலகிரி மாவட்ட எல்லைகள், உதகை- கோத்தகிரி சாலையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT