நீலகிரி

வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினம்

4th Jun 2023 12:15 AM

ADVERTISEMENT

 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் ேதி கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி, குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ராணுவ வீரா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், தேசிய மாணவா் படை, வெலிங்டன் கண்டோண்மென்ட், கிளீன் குன்னூா் தன்னாா்வ அமைப்பினா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்சியை, வெலிங்டன் ராணுவ மைய கமாண்டா் பிரிகேடியா் எஸ்.கே.யாதவ் தொடங்கிவைத்தாா்.

இதில், பல்வேறு தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று சாலைகள், ஓடைகள் மற்றும் தாவர கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஒருவார காலத்துக்கு இந்த பணிகள் நடைபெறும் என்றும், சுமாா் 700 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT