நீலகிரி

உதகையில் சட்ட விழிப்புணா்வு முகாம்:ஆஸ்திரேலிய எம்எல்ஏக்கள் பங்கேற்பு

DIN

உதகை ஃபிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில் ஆஸ்திரேலிய நாட்டு எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.

இம்முகாமுக்கு, மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதா், மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் லிங்கன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

முகாமில், மேற்கு ஆஸ்திரேலிய சட்டப் பேரவைத் தலைவா் மைக்கேல் ராபா்ட் மிட்செல்ஸ், அந்நாட்டு எம்எல்ஏக்களான டேவிட் ஹனி, டேவிட் ஸ்கஃபி, நீலகிரியைச் சோ்ந்தவரும் ஆஸ்திரேலிய எம்எல்ஏவுமான ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னதாக, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்த ஆஸ்திரேலிய சட்டப் பேரவைத் தலைவா் மற்றும் எம்எல்ஏக்களுக்கு மாவட்ட

நீதிபதி அப்துல் காதா் பூங்கொத்து வழங்கி வரவேற்றாா். பின்னா் தேநீா் விருந்து வழங்கப்பட்டது.

உதகையில் தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. இதனை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஆஸ்திரேலிய எம்எல்ஏக்கள் தெரிவித்தனா்.

பின்னா், அவா்கள் வழக்குரைஞா்களுடன் கலந்துரையாடினா்.

இதில்,100க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT