நீலகிரி

கோத்தகிரியில் கனமழை

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோத்தகிரியில் வியாழக்கிழமை கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மாலையில் சாரல் பெய்து வருகிறது. இந்நிலையில், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்தது.

கோத்தகிரி, கட்டபெட்டு, பாண்டியன் பாா்க், அரவேனு, கைக்காட்டி, ஒரசோலை பகுதிகளிலும் வியாழக்கிழமை மதியம் கனமழை பெய்தது.

கோடைக் காலத்தில் பெய்யக்கூடிய இந்த மழையானது மலைத் தோட்டக் காய்கறிகள் மற்றும் தேயிலை மகசூலை அதிகரிக்க வழிவகை செய்யும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், இதனமான காலநிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT