நீலகிரி

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் உலவும் யானை

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை உலவி வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது, குடியிருப்புப் பகுதிகளில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கே.என்.ஆா் பகுதியில் ஒற்றை யானை சாலையில் வியாழக்கிழமை உலவியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், வாகனங்களை அங்கங்கே நிறுத்தியதுடன் யானையை சாலையைக் கடக்க உதவினா்.

ADVERTISEMENT

இதையடுத்து, யானை அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றதும், அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் இரவில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT