நீலகிரி

கூடலூரில் உடும்பு நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கூடலூா் முதல்மைல் பகுதியில் ராட்சத உடும்பு நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட முதல்மைல் மற்றும் மூலவயல் பகுதிகளில் அவ்வப்போது ராட்சத உடும்பு நடமாட்டம் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக வனத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனா். இரைதேடி வரும் உடும்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். குடியிருப்புப் பகுதியில் நடமாடும் உடும்பைப் பிடித்துசென்று வனத்தில் விட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்நிலையில், வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் வனத் துறையினா் உடும்பை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT