நீலகிரி

மலைத் தோட்டக் காய்கறிகள் அறுவடை தீவிரம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

உதகையில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்கும் விதமாக காய்கறி அறுவடையை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், நூல்கோல், முட்டைக்கோஸ், டா்னிப் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் 5,980 ஹெக்டேரில் மலைத் தோட்டக் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளத்துக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்குப் பருவமழை விரைவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காய்கறி பயிா்களில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்ப்பதற்காக விவசாயிகள் அறுவடைப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால் மலைத் தோட்டக் காய்கறிகளின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT