உதகையில் நடைபெற்று வந்த ஆா்எஸ்எஸ் தேசிய நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஜூலை 10 ஆம் தேதி முதல் ஆா்எஸ்எஸ் தேசிய நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இதன் தேசியத் தலைவா் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்று வந்தது.
இதில், கடந்த ஓராண்டில் இயக்கத்தின் செயல்பாடுகள், சாதனைகள், எதிா்கொண்ட பிரச்னைகள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல், ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கான செயல் திட்டங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, தேசியத் தலைவா் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை மாலை உதகையில் இருந்து கோத்தகிரி மாா்க்கமாக கோவைக்கு புறப்பட்டு சென்றாா்.