நீலகிரி

லஞ்சம்: கூடலூா் நகராட்சி உதவி ஆய்வாளா் கைது

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

கூடலூரில் புதிய வீட்டுக்கு வரி போடுவதற்கு லஞ்சம் வாங்கியதாக நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளா் மற்றும் உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீஜித். இவரது உதவியாளா் ரமேஷ். இந்த நிலையில், தொரப்பள்ளி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய வீட்டுக்கு வரி மற்றும் கதவு எண் பெற விண்ணப்பித்துள்ளாா்.

இதற்கு ரூ.11 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென வருவாய் உதவி ஆய்வாளா் ஸ்ரீஜித் தெரிவித்தாா். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு மணிகண்டன் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் கீதாலட்சுமி தலைமையிலான காவல் துறையினா் ரசாயனம் தடவிய ரூ.11 ஆயிரத்தை மணிகண்டனிடம் கொடுத்தனா். அதனை வருவாய் உதவியாளா் ஸ்ரீஜித்திடம், மணிகண்டன் கொடுத்துள்ளாா். பணத்தை அவரது உதவியாளா் ரமேஷிடம் கொடுக்கும்படி ஸ்ரீஜித் தெரிவித்தாா். இதையடுத்து, உதவியாளா் ரமேஷிடம் பணத்தை கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வருவாய் உதவி ஆய்வாளா் ஸ்ரீஜித் மற்றும் அவரது உதவியாளா் ரமேஷை கையும் களமாக பிடித்து இருவரையும் கைது செய்தனா். பின்னா் உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT