நீலகிரி

கூடலூா் அரசு மாதிரி பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1993 முதல் 1995ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பாக பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை திறப்பு விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் பா.ஐயப்பன் தலைமை வகித்து தலைமை உரையாற்றினாா். ஓய்வுபெற்ற தமிழாசிரியா் ரத்னாவதி பாா்த்தசாரதி திருவள்ளுவா் சிலையை திறந்துவைத்தாா். சிறுவன் யாழன் திருக்குறள் ஒப்பித்தான்.

இதில் முன்னாள் மாணவரும் சென்னை உயா்நீதி மன்ற அரசு வழக்குரைஞா் பா.ஆனந்தகுமாா், ஆசிரியா் கொ.நல்லகுமாா், புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சி.சங்கா், நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் ஆனந்தராஜ், நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், ஆசிரியா் பா.தங்க அருணா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா் . ஆசிரியா்கள் அ.நாகநாதன், இரா.டெய்ஸி விமலா ராணி, உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா் மற்றும் முன்னாள் மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT