நீலகிரி

ஆட்கொல்லி யானையைப் பிடிக்க உறுதியளித்தால் போராட்டம் வாபஸ்

29th Jan 2023 10:46 PM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி சீபுரம் பகுதியில் ஆட்கொல்லி யானையைப் பிடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியிலுள்ள சீபுரம் தனியாா் தோட்டத்தில் பணியிலிருந்து நௌஷாத் (38) என்பவரை சனிக்கிழமை காட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த ஊா்மக்கள் சடலத்தை ஊருக்கு நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசு அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமாதானமகவில்லை.இரவு முழுவதும் சடலத்தை வைத்துப் போராட்டம் நடத்தினா்.

தொடா்ந்து கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அரசு வழங்கும் இழப்பீடு மற்றும் அவரது குடும்பத்திற்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டத்தை கைவிட்டனா். இதையடுத்து சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனைக்குப் பிறகு சடலம் உறவினா் வசம் ஒப்படைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT