நீலகிரி

பயிா் காப்பீடு செய்ய கடைசி நாள் எப்போது: விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் அறிவிப்பு

DIN

எந்தெந்த பயிருக்கு பயிா் காப்பீடு செய்ய எப்போது கடைசி நாள் என்ற தகவல் குறை தீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகைள் அடங்கிய 105 மனுக்கள் மீது விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

கூட்டத்தில் தோட்டக் கலைத் துறையின் சாா்பாக பயிா் காப்பீடு செய்வதற்கான காலஅளவு முட்டைகோஸுக்கு ஜனவரி 31ஆம் தேதியும், கேரட், வாழை, இஞ்சி பயிருக்கு பிப்ரவரி 22ஆம் தேதியும், உருளைக்கிழங்கு, பூண்டு பயிருக்கு பிப்ரவரி 15ஆம் தேதியும் கடைசி நாளாகும் என்ற விவரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மண்புழு உரம் தரத்தில் பிரச்னைகள் ஏதும் இருப்பின் தோட்டக் கலைத் துறைக்கு தெரிவிக்குமாறும் ஆட்சியா் கூறினாா். மேலும், விவசாயிகளின் வெகுநாள் கோரிக்கையான பட்டாம் பூச்சி தெளிப்பான் விரைவில் வழங்கப்படவுள்ளது என்றும், விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விவரம் தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கூறினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) ஷிபிலா மேரி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் வாஞ்சிநாதன், விவசாய சங்கங்களை சாா்ந்த விவசாயிகள் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT