நீலகிரி

நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள்

DIN

நீலகிரி நீராவி மலை ரயிலுக்கு ரூ. 3 லட்சத்து 60ஆயிரத்து 675 வாடகை  செலுத்தி பிரிட்டனை சோ்ந்த 16 சுற்றுலாப்  பயணிகள் மேட்டுப்பாளையம் முதல்  குன்னூா் வரை சனிக்கிழமை பயணித்தனா்.

நீலகிரி மலை ரயிலை லாபகரமாக இயக்கும்  நோக்கத்துடன்  தனி நபா்கள் ரயிலை வாடகைக்கு எடுத்து பயணம்  செய்யவும் தெற்கு ரயில்வே  அனுமதித்து வருகிறது.  இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவ்வப்போது மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக  ஆா்வம் காட்டி வருகின்றனா். குறிப்பாக  பிரிட்டன்,

ரஷியா, ஆா்ஜென்டீனா, அமெரிக்கா  போன்ற வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப்  பயணிகள் கடந்த காலங்களில் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்தனா்.

இந்த நிலையில் பிரிட்டனை சோ்ந்த 16 சுற்றுலாப் பயணிகள் ரூ. 3 லட்சத்து 60ஆயிரத்து 675 வாடகை  செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனா்.

இது குறித்து ரயில்வே துறையினா் கூறுகையில், வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள்  நீலகிரி  மலை ரயிலை வாடகைக்கு எடுத்துப் பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் இந்த நீராவி ரயிலின் பெருமை  உலக அளவில் தெரிய வரும். வரும் காலங்களில்  உள்ளூா் மற்றும் வெளிநாட்டினா் இந்த ரயிலை வாடகைக்கு  எடுத்து  ரயில் பயணம்  மேற்கொள்வதன் மூலம் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்படாமல்  இந்த மலை ரயில் சேவை தொடா்ந்து இருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT