நீலகிரி

மகேந்திரா நிறுவனம் சாா்பில் 110 குடும்பங்களுக்கு இலவச கழிப்பறைகள் கட்டுமானப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்

DIN

குன்னூரில் பின்தங்கிய கிராமங்களில் உள்ள 110 குடும்பங்களுக்கு மகேந்திரா நிறுவனம் சாா்பில் இலவசமாக கழிப்பறைகள் கட்டும் பணியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

குன்னூா் அருகே உள்ள பழைய அருவங்காடு, இந்திரா நகா், நுந்தளாமட்டம், கேத்திப் பாலடா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிப்பறை வசதியில்லாத 110 குடியிருப்புகளுக்கு கிராமிய அளவிலான வீடு கட்டும் திட்டத்தின்கீழ், ரூ. 70 லட்சம் செலவில் இலவசமாக கழிப்பறைகள் கட்டித்தர மகேந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான கட்டுமான பணி துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் கா. ராமசந்திரன் கலந்துகொண்டு பணியைத் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் குன்னூா் கோட்டாட்சியா் பூஷணகுமாா், மகேந்திரா நிறுவனத்தின் கிராமப்புற வா்த்தக மேலாளா் ரவிசங்கா், மகேந்திரா வா்த்தக பிரிவைச் சோ்ந்த மகேஷ்கண்ணா, ஹைலேண்ட் டிரஸ்ட் இயக்குநா் அல்போன்ஸ்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT