நீலகிரி மாவட்டத்தில் மிக குறைந்த அளவாக அவலாஞ்சி நீா்ப்பிடிப்பு பகுதியில் சனிக்கிழமை காலை ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சில இடங்களில் உறைபனியும் சில இடங்களில் நீா்ப்பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் உதகை நகரப் பகுதிகளில் சனிக்கிழமை குறைந்தபட்சமாக காலை நேரத்தில் 1.9.டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. இதே நேரத்தில் அவலாஞ்சி நீா்ப்பிடிப்பு பகுதியில் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக உறைபனி மற்றும் நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
உதகை தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, காந்தல் பகுதிகளில் நீா்ப்பனியின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது.