நீலகிரி

கூடலூா் அருகே யானை தாக்கி முதியவா் பலி

DIN

கூடலூரை அடுத்த அல்லூா்வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தொரப்பள்ளி அல்லூா்வயல் பகுதியைச் சோ்ந்தவா் கரும்பன் (75).

இவா் தனது வீட்டிலிருந்து சாலைக்கு திங்கள்கிழமை நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு மூங்கில் புதரில் இருந்த காட்டு யானை கரும்பனை தாக்கியது.

இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவா்கள் கூச்சலிடவே காட்டு யானை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

பொதுமக்கள் சாலை மறியல்

இப்பகுதியில் சாலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், சாலையின் இருபுறமும் செடிகள் அதிகம் உள்ளதால் வன விலங்குகள் வருவது தெரியவதில்லை என்றும், தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இப்பகுதியை கடந்து செல்வதற்கு அச்சமாக உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

மேலும் காட்டு யானை தாக்கி உயிரிழந்த கரும்பன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், காட்டு யானை நுழையாதவாறு வனப் பகுதியில் அகழி அமைக்க வேண்டும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திடீா் சாலை மறியல், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்,

தகவலறிந்து அங்கு வந்த கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதிரதுல்லா, வட்டாட்சியா் சித்துராஜ், வனத் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், காட்டு யானையை விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், பொதுமக்கள் செல்லக்கூடிய பாதைகளில் உள்ள புதா்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இறந்தவா் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், கிராமத்தைச் சுற்றி அகழி அமைத்து தரப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT