திருப்பதி

79,207 பக்தா்கள் தரிசனம்; உண்டியல் காணிக்கை ரூ.3.19 கோடி

19th May 2023 07:21 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 79,207 பக்தா்கள் தரிசித்தனா்; உண்டியல் காணிக்கையாக ரூ.3.19 கோடி கிடைத்தது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை காலை 36 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா். கோடை விடுமுறை காரணமாக பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், வியாழன் காலை 31 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 36 மணி நேரம் காத்திருப்புக்குப் பின்னா், தரிசனத்துக்கான அனுமதி கிடைத்தது.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன் பெற்றவா்கள்) 36 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

புதன்கிழமை முழுவதும் 79,207 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 41,427 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

ADVERTISEMENT

பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.3.19 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT