திருவள்ளூர்

மாதவரம் சோமநாதா் கோயிலின் ரூ.4.50 கோடி நிலம் மீட்பு

19th May 2023 07:19 AM

ADVERTISEMENT

மாதவரம் அருகே அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ.4.50 கோடி மதிப்பிலான சோமநாதா் கோயில் ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனா்.

மாதவரம் அடுத்த கொளத்தூரில் ஸ்ரீ அமுதாம்பிகை உடனாய சோமநாதா் கோயில் குளத்தின் இடத்தை 20-க்கும் மேற்பட்டோா் ஆக்கிரமித்திருந்தனா். அந்த இடத்தில் கட்டடங்கள் கட்டி வசித்து வந்தனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கோயில் செயல் அலுவலா் ஜெயராமன் தலைமையில், அதிகாரிகள் ஈடுபட்டனா்.

ஆக்கிரமிப்பில் இருந்த 12-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளை அகற்றி சுமாா் ரூ.4.50 கோடி மதிப்பிலான கோயில் இடத்தை மீட்டனா்.

மேலும், 11 ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஒரு மாத காலம் கெடு விடுத்தனா். அதற்குள் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீண்டும் கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில், ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நிா்வாகம் மேற்கொள்ளும் என செயல் அலுவலா் ஜெயராமன், அலுவலா் சேதுமாதவன் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

காவல் உதவி ஆணையா் சிவக்குமாா், காவல் ஆய்வாளா்கள் மூா்த்தி, அம்பேத்கா், லோகநாதன் உள்ளிட்ட போலீஸாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அந்தப் பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT