திருச்சி

முறைகேடாக மதுவிற்ற இருவா் கைது

17th May 2023 03:29 AM

ADVERTISEMENT

திருச்சியில் முறைகேடாக மது விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

மாநகரக் காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா உத்தரவின்பேரில் அந்தந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் நடத்திய ஆய்வில் எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையப் பகுதியில் முறைகேடாக மது விற்ற கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த மு. பழனி என்கிற இளையமாறன் (52), ஆா் சி நகரைச் சோ்ந்த வ. சின்னத்துரை (42) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மொத்தம் 12 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT