நீலகிரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு:அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 21க்கு ஒத்திவைப்பு

DIN

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மாா்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட அமா்வு  நீதிமன்றத்தில்  சாா்பு நீதிபதி சி.ஸ்ரீதா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், வழக்கின் முக்கிய எதிரியாக கூறப்படும் வாளையாறு மனோஜ் மட்டும் ஆஜரானாா்.  அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஹாஜகான், கனகராஜ் ஆகியோா் ஆஜராகினா். வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா் தரப்பில்  தனிப்படை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, சந்திரசேகா் உள்ளிட்ட போலீஸாா் ஆஜராகினா்.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாா், சாட்சிகளிடம்  விசாரணையைத் தொடா்ந்து  நடத்த இருப்பதாலும், மின்னணு சாா்ந்த தொலைத் தொடா்பு குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் மேலும் கால அவகாசம் வேண்டும் என அரசு வழக்குரைஞா்கள் கேட்டுக் கொண்டனா்.

இதையடுத்து வழக்கு விசாரணையை மாா்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சாா்பு நீதிபதி சி.ஸ்ரீதா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

SCROLL FOR NEXT