நீலகிரி

‘பழுதடைந்த நியாய விலைக் கடைகளை சீரமைக்க தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்’

DIN

நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள நியாய விலைக்கடைகளை சீரமைக்க தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 403 நியாய விலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நியாய விலைக் கடைகள் கூட்டுறவு

நிறுவனம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், சுய உதவிக் குழுக்கள் மற்றும் எஸ்டேட் நிா்வாகத்தினா் ஆகியோரால் நடத்தப்படுகின்றன.

இவற்றில் சொந்தமான கட்டடங்களில் செயல்பட்டு வரும் சில பழுதடைந்த நியாய விலைக்கடைகளை சீரமைப்பது தொடா்பாக தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களை அணுக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி வட்டத்தில் கோழிக்கரை, குஞ்சப்பனை, கொணவக்கரை, கொட்டக்கொம்பை ஆகிய நியாய விலைக் கடைகள், கூடலூா் வட்டத்தில் ஸ்ரீமதுரை, கொங்கா்மூலா, மண்வயல், குச்சிமுச்சி மற்றும் போஸ்பரா ஆகிய நியாய விலைக் கடைகள் டிவிஎஸ் தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது. செம்மனாரை நியாய விலைக் கடை பா்ன்சைடு எஸ்டேட் நிா்வாகத்தினராலும், உதகை வட்டத்தில் பிங்கா்போஸ்ட் , குன்னூா் வட்டத்தில் எடப்பள்ளி நியாய விலைக் கடைகள் நீலகிரி மாவட்ட எரிவாயு விநியோகஸ்தா் சங்கத்தினா் மூலமும் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற பழுதடைந்த நியாய விலைக் கடைகளை சீரமைக்க தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT