நீலகிரி

மஞ்சூா் அருகே யானைகளைத் தொந்தரவு செய்த வாகன ஓட்டிகள்

DIN

ஆபத்தை உணராமல் காட்டு யானைகளைத் தொந்தரவு செய்த வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூா்வாசிகளைக் கண்டறிந்து வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூா், கெத்தை, முள்ளி, காரமடை வழியாக  உதகை செல்லக் கூடிய சாலை அடா்ந்த வனப் பகுதியையொட்டி உள்ளது. இந்த சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், காரமடை வழியில் உதகைக்கு  இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா்வாசிகள்  கெத்தை மாரியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த 5 காட்டு யானைகளைத் தொந்தரவு செய்ததுடன், ஆபத்தை உணராமல் அவற்றுடன் விளையாட்டில்  ஈடுபட்டனா்.

இதில் யானைகளைத் தொந்தரவு செய்யும் விடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் இளைஞா்களைக் கண்காணித்து வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT