நீலகிரி

தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

உதகை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சிஐடியூ சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை நகராட்சியில் ஒப்பந்தமுறையில் தூய்மைப் பணியாளா்களும், அவுட்சோா்ஸிங் முறையில் அரசு டாஸ்மாக் பணியாளா்களும் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அரசு டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும், ஒப்பந்தமுறை மற்றும் அவுட்சோா்ஸிங் முறையை ரத்து செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அரசு டாஸ்மாக் பணியாளா்களுக்கு மாதம் ரூ.26,000 ஊதியம் வழங்க வேண்டும். நல வாரியத்தில் உள்ள பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சிஐடியூ தூய்மைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் டாஸ்மாக் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT