நீலகிரி

தேவாலாவில் செயல்படும் தாா் கலவை தொழிற்சாலையை இடமாற்ற வேண்டும்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தாா் கலவை தொழிற்சாலையை அகற்றி பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம் தேவாலாவில் செயல்பட்டு வரும் தனியாா் தாா் கலவை தொழிற்சாலை விதிமுறைகளுக்கு புறம்பாக இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் தொழிற்சாலை அமைந்துள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

இந்த தொழிற்சாலை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் எந்த நிபந்தனைகளையும் பின்பற்றுவதில்லை. மேலும், நெடுஞ்சாலைக்கு அருகிலும், வனப் பகுதிக்கு அருகிலும் தொழிற்சாலை அமைந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக பொதுமக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இதில் பொதுமக்களின் நலன் கருதி இந்த ஆலையை அங்கிருந்த அகற்றி பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT