நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 16, 17இல் ஆட்சிமொழி கருத்தரங்கம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தில் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டட கூட்டரங்கில் பிப்ரவரி 16 மற்றும் 17ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கங்கில் ஆட்சிமொழி வரலாற்றுச் சட்டம், ஆட்சிமொழி செயலாக்க அரசாணைகள், மொழிபெயா்ப்பு, கலைச் சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வு உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT