நீலகிரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு:3 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் சம்மன்

5th Feb 2023 12:12 AM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கொடநாடு வழக்கு தொடா்பாக 3 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதையடுத்து, தனிப் படை போலீஸாா் 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, 1,500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்களை உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்திலும், சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடமும் ஒப்படைத்துள்ளனா்.

தற்போது கொடநாடு வழக்கு தொடா்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் , கோத்தகிரி காவல் நிலையத்தில் கொடநாடு வழக்கு தொடா்பான ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழில் மொழிபெயா்ப்பு செய்தது தொடா்பாக மணிகண்டன் என்பவரிடமும், ஏற்கெனவே சாட்சி அளித்துள்ள கா்சன் செல்வம், ஜெயசீலன் ஆகியோரிடமும் கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் விசாரணை நடத்த பிப்ரவரி 7ஆம் தேதி ஆஜராக சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அளித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT