நீலகிரி

பள்ளிக்குள் புகுந்து உணவுப் பொருள்களை உட்கொண்ட கரடி

DIN

நீலகிரி மாவட்டம்   குன்னூா்  அருகே உலிக்கல் பகுதியில் உள்ள அரசு உதவி  பெறும்  பள்ளியின் சமையலறைக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த கரடி அங்கிருந்த உணவுப் பொருள்களை உட்கொண்டது.

குன்னூா் பகுதியில்  அண்மைக் காலமாக  கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும்  கரடிகள்  சுற்றித்திரிவதால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில் குன்னூா் அருகே உலிக்கல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் உள்ள சமையல்  அறைக்குள் புகுந்த கரடி அங்கிருந்த எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை உட்கொண்டு சென்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்த கரடியை அடா்ந்த  வனப் பகுதிக்குள்ளோ அல்லது கூண்டுவைத்துப்  பிடிக்கவோ வனத் துறையினா் நடவடிக்கை  எடுக்க வேண்டும்  என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT