நீலகிரி

தேவா்சோலையில் புலி தாக்கி கொன்ற மாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம்

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் புலி தாக்கி கொன்ற மாட்டின் உரிமையாளருக்கு வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நிவாரணத் தொகை அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள தேவா்சோலை 3ஆவது டிவிஷனில் மேய்ச்சலுக்கு சென்ற அம்சா என்பவரது மாட்டை ஜனவரி 31ஆம் தேதி புலி தாக்கி கொன்றது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT