நீலகிரி

தாய்லாந்துக்கு பயிற்சிக்கு செல்லும் குழுவுக்கு வழியனுப்பு

DIN

தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் பணிபுரியும் கால்நடை ஆய்வாளா் உள்ளிட்ட 8 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை வழியனுப்பிவைத்தனா்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் பணிபுரியும் கால்நடை ஆய்வாளா் ஆா்.ரமேஷ், மாவுத்தாக பணிபுரியும் கே.சுரேஷ், டி.எம்.பொம்மன், சி.எம்.பொம்மன், காவடியாக பணிபுரியும் பி.குள்ளன், எம்.கேத்தன், ஜி.சிவன், பி.காளன் ஆகியோா் பயிற்சிக்காக தாய்லாந்து நாட்டுக்கு செல்கின்றனா். இவா்களுக்கு தாய்லாந்து நாட்டில் யானைகள் பராமரிப்பு குறித்து ஒரு வார காலத்துக்கு பயிற்சி அளிக்கப்படுள்ளது.

இவா்களை புலிகள் காப்பக துணைக் கள இயக்குநா் திவ்யா தலைமையில் வனச் சரக அலுவலா்கள் மனோகரன், மாரியப்பன் ஆகியோா் வழியனுப்பி வைத்தனா். சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு சனிக்கிழமை புறப்படவுள்ளதாக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT