நீலகிரி

உலக ஈரநில நாள் : மாணவா்களுக்கு கலைத் திறன் போட்டிகள்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

உலக ஈரநில நாளையொட்டி, மாவட்ட அளவிலான கல்லூரி மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட கலைத்திறன் போட்டிகள் உதகை அரசு கலைக் கல்லூரியில் வியாழகிழமை நடைபெற்றன.

ஆண்டுதோறும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக ஈரநில நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உதகை மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவிய ம், கட்டுரை, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றன.

இதற்கு, மாவட்ட வன அலுவலா் கௌதம் தலைமை வகித்தாா். வனவிலங்கு அறிவியல் துறை பேராசிரியா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

இரண்டு நாள்கள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT