கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் தனியாா் தோட்டத்தில் புலி இறந்து கிடந்தது புதன்கிழமை இரவு தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியிலுள்ள அம்புகுத்தி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் புலி இறந்து கிடப்பதாக வயநாடு மாவட்ட வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு கழுத்தில் கம்பி மாட்டிய நிலையில் புலியின் சடலம் கிடந்தது.
அந்த புலியை பரிசோதித்த வனத் துறையினா் சுமாா் 2 வயதுடைய ஆண் புலி என்றும், வேறு ஏதோ பகுதியில் கழுத்தில் ஒயா் சிக்கிய நிலையில் இங்கு வந்து இறந்துள்ளது என்றும் தெரிவித்தனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.