நீலகிரி

ஆட்கொல்லி யானையை கண்காணிக்கும் பணியில் வனத் துறை ஊழியா்கள்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் முகாமிட்டுள்ள ஆட்கொல்லி யானையை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஓவேலி பகுதியில் ஒவிடி1 ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை அண்மையில் இரண்டு பேரை கொன்றது. இந்த யானை தற்போது

கிளன்வான்ஸ் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த ஆட்கொல்லி யானை மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் வனத் துறையினா் ட்ரோன் கேமரா மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

இதற்கிடையே, நியூஹோப் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டத்தை வனத் துறையின் அதிவிரைவு படையினா் கிளன்வான்ஸ் பகுதியிலுள்ள வனத்துக்குள் விரட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT