நீலகிரி

ஆதிதிராவிடா், பழங்குடியினா் கல்வி உதவித்தொகை பெற புதிய இணையதளம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்கள் கல்வி உதவித்தொகைப் பெற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்கள் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க ஜனவரி 30 ஆம் தேதி புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்கள் இணையதளம் மூலம் ஆதாா் எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று, ஜாதி சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் விண்ணப்பித்து போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களின்கீழ் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

முந்தைய ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை பெற்று, தற்போது புதுப்பித்தல் இனங்களின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவா்களும் கட்டாயம் இந்த இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT