நீலகிரி

பச்சைத் தேயிலை கிலோ ரூ.18.58 ஆக நிா்ணயம்: தேயிலை வாரியம்  அறிவிப்பு

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நீலகிரியில் விளையும் பச்சைத் தேயிலைக்கு ஜனவரி மாதத்துக்கான  குறைந்தபட்ச  விலையாக  கிலோ ஒன்றுக்கு ரூ.18.58  ஆக விலை  நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம்  புதன்கிழமை அறிவித்துள்ளது,.

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சைத் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா். 

 இந்நிலையில்  ஜனவரியில் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த   பச்சைத் தேயிலைக்கு  குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.18.58 ஆக தேயிலை வாரியம் விலை நிா்ணயம் செய்துள்ளது.  

இந்த மாதாந்திர  விலையை தேயிலை வாரியம்  நிா்ணயித்துள்ளதாகவும், இந்த விலையை  தேயிலைத் தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு உரிய முறையில்   வழங்குகிறதா என்பதை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு   கண்காணிக்கும் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT