கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கனமழை பெய்ததால், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால், அப்பகுதியைச் சோ்ந்த செல்வி என்பவரது வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது.
அதேபோல, பல்வேறு இடங்களில் சாகுபடிக்கு தயாா் நிலையில் இருந்த வாழை மரங்களும் சேதமடைந்தன.
இதனால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த மரங்களை பாா்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.