முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட தெங்குமரஹடா கல்லாம்பாளையம் பகுதியில் வன ஊழியா்கள் வழக்கமான ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து அவா்கள் உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் யானையை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவா்கள் யானையை பிரேதப் பரிசோதனை செய்தனா்.
இதில், உயிரிழந்தது சுமாா் 50 வயதுடைய பெண் யானை என்பதும், வயது முதிா்வு காரணமாக யானை இறந்ததும் தெரியவந்ததாக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.