நீலகிரி

மலா்க் கண்காட்சி: தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் பணி தீவிரம்

25th Apr 2023 12:23 AM

ADVERTISEMENT

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெறுவதையொட்டி,ரூ. 17 லட்சம் செலவில் பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் ஆண்தோறும் மலா்க் கண்காட்சி மே மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு மலா்க் கண்காட்சி மே 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மலா்க் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரூ. 17 லட்சம் செலவில் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் வடிவிலான இருக்கைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

முதற்கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா புல் மைதான பகுதியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தா்ப்பூசணி, பப்பாளி, பாகற்காய், கேரட் போன்ற வடிவங்களில் 6 இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நுழைவாயில் பகுதியில் உள்ள ஜப்பான் பூங்காவில் ரூ.7 லட்சம் மதிப்பில் ஜப்பானிய காஸிபோ எனப்படும் கோபுரம் மற்றும் மீன் காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT