நீலகிரி

தோட்டக்கலைப் பண்ணை ஊழியா்கள் போராட்டம்:பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்

15th Apr 2023 11:29 PM

ADVERTISEMENT

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி அரசு தோட்டக்கலைப் பண்ணை தற்காலிக பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பூங்காக்களை பராமரிக்கும் பணியில் சில அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

உதகை தாவரவியல் பூங்கா, ரோஸ் பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளா்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஊதிய உயா்வு, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், தகுதியானவா்களுக்கு பதவி உயா்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை தாவரவியல் பூங்காவில் கடந்த 24 நாள்களாக தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

ADVERTISEMENT

இதனால், பூங்காக்களில் குப்பைகளை அகற்றுதல், நாற்று நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா்கள் பாலசங்கா் , ராதாகிருஷ்ணன், அனிதா, சிம்ஸ் பூங்கா மேலாளா் லட்சுமணன் ஆகியோா் பூங்காக்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தோட்டக்கலை ஊழியா்களின் வேலை நிறுத்தம் காரணமாக மே மாதம் நடைபெறும் மலா்க் கண்காட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT