நீலகிரி

ஆணைகட்டி வனப் பகுதியில் யானை உயிரிழப்பு

15th Apr 2023 11:29 PM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டம், ஆணைகட்டி வனப் பகுதியில் இறந்து கிடந்த யானையின் சடலத்தை மீட்டு வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், ஆணைகட்டி வனப் பகுதியில் யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த முதுமலை வனப் பாதுகாப்பு படை, சீகூா் வனப் பணியாளா்கள் யானையின் சடலத்தை மீட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

இதில், உயிரிழந்தது சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது.

உடலில் ஏற்பட்டுள்ள காயங்களின் அடிப்படையில் யானைகளுக்கு இடையே மோதலில் இந்த யானை உயிரிழந்திருக்கலாம் என்று வனக் கால்நடை மருத்துவா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT