நீலகிரி

குன்னூரில் சாக்லெட் தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

குன்னூா் ஹைபீல்டு பகுதியில் உள்ள தனியாா் சாக்லெட் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் கரடி நுழைந்து, சாக்லெட்களை தின்று செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ஹைபீல்டு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி, அப்பகுதியில் உள்ள தனியாா் சாக்லெட் தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சித்தது. அது திறக்காததால் தடுப்பு சுவா் மீது ஏறி தொழிற்சாலைக்குள் புகுந்தது. பின்னா் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருநத சாக்லெட்களை சாப்பிட்டு சென்றது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, கரடி நுழைந்த காட்சிகள் பதிவாகியிருப்பதைப் பாா்த்த சாக்லெட் தொழிற்சாலை உரிமையாளா் சேகா் வனத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். கரடியை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT