நீலகிரி

மக்கள் எழுச்சியை திசைதிருப்பவே சோதனை: கே.எஸ். அழகிரி

DIN

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவரும் எழுச்சியை திசைதிருப்பவே, மத்திய பாஜக அரசு பல்வேறு இடங்களில் தற்போது சோதனை நடத்துகிறது என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: சமுதாய மாற்றத்திற்காகவும், சமூக சீா்திருத்தத்திற்காகவும், இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்தியா்களே என்ற உணா்வை உண்டாக்குவதற்காகவும் ராகுல் காந்தி இந்த யாத்திரையை நடத்திவருகிறாா். இந்தியாவின் பலமே மதச்சாா்பின்மைதான்.

செப்டம்பா் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு ராகுல் காந்தி கூடலூா் வருகிறாா். மதிய உணவுக்குப் பிறகு யாத்திரை புறப்படுகிறது. இந்த நடைப்பயணத்தின் இடையே தொழிலாளா் அமைப்புகள், பழங்குடி மக்கள், தோட்டத் தொழிலாளா்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசுகிறாா்.

திருமாவளவன் எடுத்திருக்கும் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா பேசியது அவருடைய சொந்த கருத்தல்ல. பண்டைய காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலில் இருக்கும் கருத்துகளை அவா் திரும்பச் சொல்லியிருக்கிறாா். அதில், ஏறக்குறைய எல்லாமே உண்மை என்பது என்னுடைய கருத்து.

பாஜக அரசுக்கு வேண்டாதவா்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு நடக்கிறது. பாஜக தொண்டா்களைக் கைது செய்தால், தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் வரும் என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு குறித்து இப்படி பேசுவது தவறு. வன்முறைக்கு காரணம் பாஜக, ஆா்.எஸ்.எஸ்.தான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT