நீலகிரி

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் ஆட்சியா் ஆலோசனை

DIN

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்துவது தொடா்பாக, துறை அலுவலா்களுடன் மாவட்ட அளவிலான கூட்டம் ஆட்சியா் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

உதகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2021- 22ஆம் ஆண்டில் மேலூா், உபதலை, சேரங்கோடு, தேனாடு, நெடுகுளா, கெங்கரை, குஞ்சப்பனை, நஞ்சநாடு, பாலகொலா, கக்குச்சி, கடநாடு கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டது.

தோட்டக்கலை துறை மூலம் இத்திட்டத்தின்கீழ், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள், அங்கக வேளாண்மைக்கான இடுபொருட்கள், வரப்பு ஓரங்களில் நட பலன்தரும் பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள், கைத்தெளிப்பான்கள் மற்றும் விசைத் தெளிப்பான்கள் போன்றவை 2,184 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 2022-23ஆம் ஆண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் உல்லத்தி, தொட்டபெட்டா, எப்பநாடு, பா்லியாா், தெங்குமரஹாடா, ஜக்கனாரை மற்றும் நெலாக்கோட்டை கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் தங்களது துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான செயல்முறை திட்டம் தயாா்செய்ய வேண்டும். தோட்டக்கலை துறை மூலம் கண்டறியப்பட்ட பயனாளிகளின் பட்டியலை தகுந்த துறைகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயிற்சிகள், முகாம்கள் போன்ற அனைத்தையும் கிராம வேளாண் வளா்ச்சித் திட்ட கிராமங்களில் தன்னிறைவு அடையும் வகையில் செயல்படுத்துவதோடு, தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டங்களிலும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் செயல்படுத்தப்படவுள்ள கிராம பஞ்சாயத்துகளில் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், மகளிா் திட்ட அலுவலா் ஜாகீா் உசேன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷில்பா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வாஞ்சிநாதன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பகவத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT