நீலகிரி

நீலகிரியில் கேரட் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

நீலகிரியில் கேரட் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனா்.

விவசாயிகள் தினந்தோறும் உற்பத்தி செய்யும் கேரட், பீட்ரூட் காய்கறிகள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி விளையும் கேரட்டுக்கு வெளி சந்தைகளில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அதன்படி, ஒரு கிலோ கேரட் குறைந்தபட்சமாக ரூ.55 முதல் அதிகபட்சமாக ரூ.105 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தேயிலைக்கு தற்போது நல்ல விலை கிடைக்காத நிலையில் கேரட்டுக்கு கூடுதல் விலை கிடைத்திருப்பது மலைத் தோட்ட விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT