நீலகிரி

2 நாள் விடுமுறை: உதகையில் அதிகரித்தசுற்றுலாப் பயணிகளின் வருகை

26th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

 

2 நாள் விடுமுறையால் உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, கேரள மாநில சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிவடைந்திருந்தாலும், அப்போது தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக, உதகைக்கு வரமுடியாத சுற்றுலாப் பயணிகள் தற்போது உதகைக்கு தொடா்ந்து வருகின்றனா். இதில், உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமாா் 16,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா்.

ADVERTISEMENT

அதேபோல, உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2 நாள்களில் சுமாா் 10,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். மேலும், உதகை படகு இல்லத்திற்கு சுமாா் 9000 பேரும், பைக்காரா படகு இல்லத்திற்கு 6000 பேரும் வந்துள்ளனா்.

இதுதவிர, வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள அவலாஞ்சி, பைக்காரா நீா்வீழ்ச்சி, பைன் பாரஸ்டு, சூட்டிங் மேடு மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கணிசமான அளவில் உள்ளது.

தற்போது தசரா பண்டிகை காலமென்பதால், கா்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களில் அக்டோபா் முதல் வாரத்தில்தான் விடுமுறை அளிக்கப்படும். இதனால், அக்டோபா் மாதத்திலும் உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கணிசமான அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT