நீலகிரி

உதகை ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியில் மருந்தாளுநா் தினம்

25th Sep 2022 12:44 AM

ADVERTISEMENT

 

உதகையிலுள்ள ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியில் நிறுவனா் தின விழா மற்றும் சா்வதேச மருந்தாளுநா் தின விழா ஆகியவை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது

உதகையிலுள்ள ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியில் நிறுவனா் ஆதி ஜெகத்குரு சிவராத்திரி ராஜேந்திர மகா சுவாமிகளின் 107 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் அலங்கரிக்கப்பட்ட சிவராத்திரி ராஜேந்திர மகா சுவாமிகளின் உருவப் படத்துக்கு கல்லூரியின் முதல்வா் எஸ்.பி.தனபால் தலைமையில் ஆசிரியா்கள், மாணவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

தொடா்ந்து நடைபெற்ற சா்வதேச மருந்தாளுநா் தின நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக நஞ்சன்கூடு கலைக் கல்லூரி முதல்வா் ஹன்னகவுடா, ஹிட்டுக்கல் மடாதிபதி சிவகுமாா் சுவாமிகள் மற்றும் கல்லூரியின் முதன்மை அலுவலா் பசவண்ண தேவரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT