நீலகிரி

சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

25th Sep 2022 12:44 AM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டம், கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியின் 16 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தென்னிந்தியத் திருச்சபையின் பேராயா் ரெவரன்ட் திமோத்தி ரவீந்தா் தலைமை வகித்தாா்.

கல்லூரியின் தாளாளா் காட்வின் ஆா்.டேனியல் வரவேற்புரையாற்றினாா். முதல்வா் பி.டி. அருமைராஜ் பேசினாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் 5 ஆம் இடம் பிடித்த மாணவி கே. தீபா, 37 ஆம் இடம் பிடித்த மாணவா் ஆா்.மதன்ராஜ்

ஆகியோருக்கு பேராயா் ரெவரன்ட் திமோத்தி ரவீந்தா் தங்கப் பதக்கம் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து 500 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா்.

இதில், கோவை திருமண்டலத்தின் உபத்தலைவா் ரெவரன்ட் ஜேக்கப் லிவிங்ஸ்டன், மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT