நீலகிரி

கிணற்றில் கிடந்த தொழிலாளியின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

25th Sep 2022 12:45 AM

ADVERTISEMENT

 

உதகை அருகே கிணற்றில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உதகை அருகேயுள்ள முத்தொரை பாலடா பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (33). கூலி தொழிலாளி. இவா் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லையாம். இது குறித்து உதகை ஊரக காவல் நிலையத்தில் அவரது உறவினா்கள் புகாா் அளித்திருந்தனா்.

இந்நிலையில், முத்தொரை பாலடா பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல்

ADVERTISEMENT

கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறையினா் கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டனா். விசாரணையில், அவா் 2 மாதத்துக்கு முன் மாயமான காளியப்பன் என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

மேலும், அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT